naseef

“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்

ஈழத்து எழுத்தாளர்களை அவர்களது சிறுகதைகளினூடே வெளிக் காட்டும் தொடரில் இம்முறை மு.தளையசிங்கம் அவர்களது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதையின் ஒலிப் பகிர்வோடு வந்திருக்கிறோம். ஈழத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் அவர்கள் 1935 இல் பிறந்து 1973 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். எழுத்துப் பயணத்தில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 17 ஆண்டுகால இவரது இயக்கத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றின் வழியாக இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், வெங்கட் சாமிநாதன், சுந்தரராமசாமி உள்ளிட்ட மூத்த தமிழகத்து …

“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம் Read More »

யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை

பெருமதிப்புக்குரிய பொன்.குலேந்திரன் அவர்களது எழுத்துகளுக்கும் எனக்குமான பந்தம் ஒரு தசாப்தம்கடந்தது. கனடாவை மையப்படுத்தி வெளி வந்த குவியம் இணைய மாத சஞ்சிகையின் தீவிர வாசகனாகஅப்போது இருந்தேன். இணைய எழுத்துகள் என்றால் நுனிப் புல் மேய்தல், பிறர் ஆக்கங்கங்களைப் பிரதிபண்ணுதல் போன்ற மோசமான இலக்கணங்கள் பதிந்திருந்த சூழலில் குவியம் இணையப் பத்திரிகையின்அறிவியல் தளமும், அதன் சுயமும் அப்போது என்னுள் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அதன் வழியாகஅறிமுகமானவர் தான் திரு பொன்.குலேந்திரன் அவர்கள். அறிவியல், ஆன்மிகம், அரசியல் என்று பல்துறைநோக்கில் …

யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை Read More »

தமிழ் இருக்கையின் தேவை

தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். “ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை” என்று தமிழ் இருக்கை குழுமத்தின் உறுப்பினர் அ. முத்துலிங்கம் அவர்கள் விபரிக்கிறார். பொதுவாக நிலையான நிதியில் (endowments) இருந்து பெறப்படும் வருவாயில் இருந்து தமிழ்க் இருக்கைக்கு நிதி வழங்கப்படுகிறது. (விக்கிப்பீடியா) அமெரிக்காவின் நியூயார்க் …

தமிழ் இருக்கையின் தேவை Read More »